Monday, January 19, 2009

சேகரிக்கப்பட்ட ப்ரியங்கள்

தளும்பி நிற்கும்

ப்ரியங்களின் கலயத்தைக்

கொணர்ந்தது

பிசாசுகளின் இருள்

நீ நீயாகவும்

நான் நானாகவும்

இருக்கக் கேட்டுக்கொண்டு





இக்குவனங்களில்

சேகரித்த ப்ரியங்கள் அவை



கொடுபல்லியாய் நீண்ட

நேசத்தின் கரங்கள்

உன்னை நானாகவும்

என்னை நீயாகவும்

ஆக்கத் துடித்துப்

பிணைத்துக்கொண்ட

தருணங்களில்

தள்ளாடிய கலயங்கள்

காலியாகிவிட்டன



வேறு இடங்களில்

வேறு வனங்களில்

ப்ரியங்களை

சேகரித்துக்கொண்டிருக்கின்றன


பிசாசுகள்


வடக்குவாசல் டிசம்பர் 2008


இக்குவனம்-கரும்புத்தோட்டம்

6 comments:

anujanya said...

நல்லா இருக்கு. 'இக்குவனம்' - இதுதான் முதல்முறை கேள்விப்படுவது; நல்லவேளை நீங்களே பொருள் தந்துவிட்டீர்கள் :)

அனுஜன்யா

பாண்டித்துரை said...

சிகப்பு நிறத்தை தவரிக்கவும். தளத்தின் நிறத்தினால் சிகப்பு எழுத்துகள் படிப்பதில் தடைஏற்படுத்துகிறது. தலைப்பின் நிறம் அல்லது வெள்ளை நிறம் சிறப்பாக இருக்கும்

butterfly Surya said...

நல்லாயிருக்கு. ஆனால் சிரம்பட்டு படிக்கிறேன்ன்

நிறத்தை மாற்றவும்.

வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

இக்குவனம் புதுசு எனக்கு

நிஜமா நல்லவன் said...

/இக்குவனம்/


முதல் முறையாக கேள்விப்படுகிறேன்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கொடுபல்லியும்,பிசாசுகளின் இருளும் சிறிது சுவையைக் குறைப்பதாகத் தோன்றுகிறது...(எனக்கு)

இக்குவனம்....ஏதாவது தொடர்பான சுட்டி தர இயலுமா? நன்றி.