சிங்கப்பூரின் ஐந்து முக்கிய சுற்றுலா இடங்கள்
தாக்காஷிமயாவுக்குப் பின்புறம்
முச்சந்தியில்
பச்சைவிளக்குக்குக் காத்திருந்த
அவசரமான நேரத்தில்
சிங்கப்பூரின்
சிறந்த சுற்றுலா இடங்கள்
ஐந்தை உடனே கூறுங்கள்
தொலைக்காட்சிக்காக
சில அவசரக் கேள்விகளை
எங்கள் நிறுவனம்
சிங்கப்பூரர்களிடம் கேட்கிறது
என்றவாறு
இருவர்
குட்டிக்கருவிகளுடன்
திடீரென்று தோன்றினார்கள்
கம்போங் புவங்காக்
புக்கிட் கோம்பாக் ஆமைகுளம்
அறிவியல் மையக்கூடத்திற்கு வெளியே
இருக்கும் மரவீடும் அங்குள்ள
அரிநெல்லிக்காய் மரங்களும்
(எம்பி குதித்து
பறித்துத் தின்றதைப் பற்றிச் சொல்லவில்லை)
புக்கிட் தீமா மலை
முதலைப் பண்ணை
இதுதானா
ஆமாம் இவைதான் என்றேன்
solvanam 25.3.2011