Tuesday, January 13, 2009

சன்னல் இல்லாத வீடு

எலியட்ஸ் பீச் மணலில்
மகனுடன் கோட்டை கட்டும்போது
அருகிலேயே விரலால்
வரைந்தாள் ஒரு சிறுமி,
பக்கத்தில் தங்கை.


வீடு வரைகிறாயா?


ஓம்.

அம்மா அதுக்கு கதவு சன்னல் எதுவுமே இல்லை


இருந்தால் திறந்து சுட்டுவிடுவார்கள்
சிறுமி சொனாள்.


அவள் தங்கை சொன்னாள்
சன்னல் கதவு இல்லாவிட்டால்
தெருவில் செத்துப்போன
அப்பாவைப் பார்த்து
எப்படிக் கூட்டிவார ஏலும்?

5 comments:

தமிழ் said...

http://anpudan-thikalmillr.blogspot.com/2008/11/blog-post_11.html

நாளை பிறந்து இன்று வந்தவள்
கவிதைத்தொகுப்பை சில மாதங்களுக்கு
முன் தான் படித்தேன்.

அருமையான கவிதைகள்

அன்புடன்
திகழ்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:(

மிகக் காத்திரமான கவிதை.

ரொம்ப நாட்கள் கழித்து எழுதுகிறீர்கள் போல.

ஆயில்யன் said...

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு கவிதையுடன் வருகிறீர்கள் அக்கா !

மனதில் கொஞ்சம் பாரம் ஏற்றிய கவிதை!

anujanya said...

welcome back. கவிதை நல்லா இருக்கு மாதங்கி.

அனுஜன்யா

priyamudanprabu said...

///
அவள் தங்கை சொன்னாள்
சன்னல் கதவு இல்லாவிட்டால்
தெருவில் செத்துப்போன
அப்பாவைப் பார்த்து
எப்படிக் கூட்டிவார ஏலும்?
//

ஒன்னும் சொல்லதுக்கு இல்லை