Wednesday, June 28, 2006

குழந்தை
பேச்சு குழறல்தான்
நடை தள்ளாடுகிறது,
உள்ளே நுழைந்த
அந்நியரைப்
பார்த்த அதிர்ச்சியில்
உணவைச் சிதறிய போது
மருண்ட பார்வை;
வார்த்தை புரியாது
என்றாலும்
பரிவோடு பேசுகிறேன்
என் வீட்டிலிருக்கும்
தொண்ணூறு வயது
குழந்தையுடன்

Friday, June 09, 2006

காற்றுவெளியில் கலந்திட

தமிழ்மணம் ப்ளாக்கர் மதுமிதா அவர் செய்யும் ஒரு ஆய்வுக்காக இந்தத் தகவல்களைக் கேட்டிருந்தார்.


வலைப்பதிவர் பெயர்: மாதங்கி

வலைப்பூ பெயர்: பெரிதினும் பெரிது கேள்

சுட்டி: http://www.ananyaaabhiajit.blogspot.com

(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சிங்கப்பூர்

நாடு: சிங்கப்பூர்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: ஜெயந்தி சங்கர்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்: 31-10-2005

இது எத்தனையாவதுபதிவு: 22

இப்பதிவின் சுட்டி : http://ananyaaabhiajit.blogspot.com/2006/06/blog-post_09.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இது போல் ஒன்று இருக்கிறது என்று
ஜெயந்தி சொன்னார். ஆர்வம் வந்தது; என் படைப்புகளையும் எண்ணங்களையும் வலையேற்றுகிறேன்.

சந்தித்த அனுபவங்கள்: சில

பெற்ற நண்பர்கள்: உண்டு

கற்றவை: தொடர்கிறது

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுதுவது உடனே அரங்கேறுகிறது;
வாசிக்கப்படுகிறது.இனி செய்ய நினைப்பவை: செய்த பின் சொல்கிறேன்

உங்களைப்பற்றிய
முழுமையான குறிப்பு: வாசிப்பில் ஆர்வம் கொண்ட ஒரு நபர்

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் (திருச்சி) இளங்கலை வேதியியல். பங்களூரில் வங்கிப்பணி. அதன் பின் திருமணமாகி சிங்கப்பூர் வந்துவிட்டேன். 14 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழார்வத்தால் முதுகலைத் தமிழ் படித்தேன்.( அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) .


உலகில் (அப்படித்தான் சொன்னார்கள்)
முதல் முறையாக தமிழில் நடத்திய
கவிதை ஸ்லாமில் (July 2005-Singapore )
Old Parliament House-World's first Tamil Poetry
Slam) இரண்டாம் பரிசு கொடுத்தார்கள்.
Singapore Indian Fine Arts ல் ரங்கோலிப்
போட்டியில் தங்கப்பதக்கம் (மெய்யாலுமே
24 காரட் தங்கக் காசு கொடுத்தார்கள் )
(1999ல்) . July 2000 இல் நடந்த சமையல்
போட்டியில் (Millenium Healthy Cooking
competition ) எங்கள் வட்டாரத்தில் முதல்
பரிசு கொடுத்தார்கள். ராஜம் (இப்ப
இருக்கா?) கட்டுரைப் போட்டியில்
முதல் பரிசு (1996) கொடுத்தார்கள்.
மங்கையர் மலர் சமையல் போட்டிகளில்
பரிசு கிடைத்தது. ஒரு நவராத்திரி
சிறப்பிதழில் அட்டைப்படத்தில் என்னைப்
(புகைப்படத்தை) போட்டார்கள் . அமரர் கல்கி

நினைவுச் சிறுகதைப் போட்டியில்
2003 ஆம் ஆண்டு மூன்றாம் பரிசு
கொடுத்தார்கள்.

என் சிறுகதைகள் வெளிவந்த இதழ்கள்:
சுமங்கலி, கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சிங்கப்பூர் தமிழ்முரசு, மலேசிய தமிழ்நேசன், திண்ணை.காம்,தேன்கூடு.காம்

மரபுக்கவிதைகள் மற்றும் புதுக்கவிதை அமுதசுரபியில் வெளிவந்துள்ளன.

கவிதைகள் உயிர்மை, வானகமே வையகமே, தமிழ்ப்பணி, தமிழோவியம்.காம், நிலாச்சாரல்.காம், தமிழ்முரசு (சிங்கை), மங்கையர்மலர், கீற்று.காம்,திசைகள்.காம்,தமிழ் சிஃபி.காம்,
ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன.
பயணக்கட்டுரை ஒன்று திசைகள்.காம் இல் 2006 இல்

வெளிவந்தது

வானொலியில் இருமுறை இனிக்கும் இலக்கியம் நிகழ்ச்சியில் கபிலர், ஔவை இருவரின் பாடலை எடுத்து என் பார்வையில் அவையொட்டி எழுந்த சிந்தனைகளை வழங்கியிருக்கிறேன்.

2005 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அமோக்கியோ நூலகத்தில் நடத்திய கதையும் காட்சியும் என்ற நிகழ்வில் 40 நிமிடங்கள் உரையாற்றினேன். (பொருள்- எழுத்தாளர் மருத்துவர் லட்சுமி அவர்களின் படைப்புகள்)


2006 மே 1 கவிஞர் பிச்சிக்காடு இளங்கோ அவர்களில் மூன்றுநூல்கள் வெளியீட்டு விழாவில்

'முதல் ஓசை' நூலை (மரபுக்கவிதைகள்) அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தார்.

சிங்கை கவிமாலை மற்றும்
கவிச்சோலை நிகழ்ச்சிகளில் பரிசு
கொடுத்திருக்கிறார்கள். சென்ற மாதம்
கவிச்சோலை நிகழ்ச்சியில் கவிஞர்
மனுஷ்யபுத்திரன் நடுவராக இருந்து
பரிசு கொடுத்தார். இணையத்தில்
நம்பிக்கை குழுமம் ஆண்டுவிழாப்
போட்டியில் நாடகத்திற்குச் சிறப்புப்
பரிசு கொடுத்தார்கள் (ஜூன் 2006)

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
30ஆம் ஆண்டுவிழாப் போட்டிகளில்
சிறுகதைப் போட்டியிலும், மரபுக்கவிதைப்
போட்டியிலும் மூன்றாம் பரிசு
கொடுத்தார்கள். (29.07.06)


நவம்பர் 9 2006 இணையத்தில் தமிழ்ச்சங்கம் வலைப்பூ நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்தது. நடுவர் கவிஞர் மு. மேத்தா அவர்கள்.

மலேசிய நாளிதழ் தமிழ்நேசன் 2006 ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கொடுத்தார்கள் (டிசம்பர் 2006)18.11.2006 அன்று சிங்கப்பூரில் நடந்த கவிஞர் கண்ணதாசன் விழாவில் 5 நிமிடங்கள் கவிதாஞ்சலி படைக்கச் சொன்னார்கள். தலைப்பு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களும் குழந்தைகளும்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின்
நூல்வெளியீட்டு விழாவில் (ஜனவரி2007)
"வாழ்ந்து பார்க்கலாம் வா" நூலாய்வில் பங்குபெற்றேன்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய 2007 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு கொடுத்தார்கள்-அன்புடன் குழுமம் 2007 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் ஆறுதல் பரிசு- நடுவர் திரு. மாலன்.

2007 ஆண்டில் இரு கவியரங்களில் பங்கு பெற்ற அனுபவம் உண்டு. திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ஏற்பாட்டில் நடந்த பொங்கல் கவியரங்கம் மற்றும் பெண்கள் கவியரங்கம்.

சிங்கப்பூரில் பள்ளிகளில் நடக்கும் போட்டிகள், சொற்போர் ஆகியவற்றில் நடுவராக பணிபுரிந்த அனுபவம் உண்டு.

2007 நவம்பர் தீபத்திருநாள் அன்று "தேசங்கள் எங்கும் தீபாவளி என்ற தலைப்பில் " சிங்கை வானொலி 96.8 இல் கவிதை வாசித்தேன்.

குழந்தைகள் தினத்தை ஒட்டி " பேசும் பொற்சித்திரமே" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு
வானொலியில் ஒலிபரப்பினார்கள்.

சென்னை நல்லோர் வட்டம் ஒழுங்கு செய்திருந்த
பாரதம் 2020 க்கு ஆலோசனையும் எனது
பங்களிப்பும்' என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் என் படைப்பு
பாராட்டுச் சான்றிதழ் பெற்றது.

ஜூன் 1 2008 அன்று என் முதல் கவிதைத் தொகுப்பு 'நாளை பிறந்து இன்று வந்தவள்'
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் வெளியிடப்பட்டது.

டிசம்பர் 2008 இதழ் வடக்குவாசலில் என் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டன