Sunday, November 28, 2010

இருப்பது என்று நினைப்பதூஉம்

நான் இருக்கிறேன்
உனக்கு என்கிறேன்
நான் இருக்கப்போவதில்லை

நீயிருக்கிறேன் என்கிறாய்
நீயும் இருக்கப்போவதில்லை


நமக்கு இன்னென்ன
இருக்கின்றன
சொல்லப்படுகிறது
அவையும் இருக்கப்போவதில்லை


இருந்துகொண்டிருக்கும்
இந்தக் கணம்
இல்லாததை
இருப்பதாக்குகிறது

1 comment:

வினோ said...

நிகழ்காலத்தில் எதிர்காலம்.. கவிதை அருமை..