Thursday, July 09, 2009

வாழ்த்துகள்!--கவிதைவாழ்த்து சொல்லத் தோன்றினால்
உடனே சொல்லிவிடு
இல்லையேல்
விட்டுவிடு
ஒரு பாதகமுமில்லை
கயமையும் இல்லை
கோபமில்லை
வஞ்சனையில்லை
பொறாமையில்லை
சூழ்ச்சியில்லை
அதனால்
நேசங்கள்
பட்டுப்போகப்போவதில்லை
தாமதமாய்ச்
சொல்லப்பட்டவாழ்த்துகள்
வாழ்த்துகளாவதில்லை
சில பொழுதுகளில்அவை
வன்முறை வண்ணம்
பூசப்பட்டு
வாழ்த்தப்படுபவரின்
காலடி நிலத்தை
நழுவச்செய்யும்
வல்லமை பெற்றவையாக
ஆகிவிடுகிறனஇடிமின்னலில்
சுழிக்காற்றில்
அமிலமழையில்
எரிகல் வெடித்தலில்
பூமிநடுக்கத்தில்
நதிப்பெருக்கில்
புதைச்சேற்றில்
ஏதோ ஒன்றில்
மாட்டிக்கொண்டு
வாழ்த்தப்படுபவர்
தவிக்கும் நேரத்தில்
போய்ச்சேருகின்றன
தாமத வாழ்த்துகள்
குதூகலத்துடன்


நாம்- ஜூன் 2009

8 comments:

நட்புடன் ஜமால் said...

ஏதோ ஒன்றில்
மாட்டிக்கொண்டு
வாழ்த்தப்படுபவர்
தவிக்கும் நேரத்தில்
போய்ச்சேருகின்றன
தாமத வாழ்த்துகள்
குதூகலத்துடன்\\

அற்புதம் மாதங்கி.

கோவி.கண்ணன் said...

அதென்னவோ சரிதான்

திருமணத்துக்கு வாழ்த்து என்று அவர்(கள்) மணவிலக்கு பெற்ற பிறகு சொன்னால் அபத்தம் தான்.

:)

அப்பாவி முரு said...

ஏதும் கோவமா?

மற்றபடி கவிதை சரியாகத்தானிருக்கு.

priyamudanprabu said...

///
தாமதமாய்ச்
சொல்லப்பட்டவாழ்த்துகள்
வாழ்த்துகளாவதில்லை
சில பொழுதுகளில்
///

ஆமங்க

Admin said...

//அவை
வன்முறை வண்ணம்
பூசப்பட்டு
வாழ்த்தப்படுபவரின்
காலடி நிலத்தை
நழுவச்செய்யும்
வல்லமை பெற்றவையாக
ஆகிவிடுகிறன//

அருமையான வரிகள்... கவிதைகள் அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்..

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

அன்புடன் நான் said...

கவிதை நல்லா இருக்கு.... சேரவேண்டிய நேரத்திலியே சொல்லிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்.

Several tips said...

நல்ல கவிதை