Tuesday, April 22, 2008

கவிதை


அச்சடிக்கப்பட்டச் சொற்கள்


மெல்ல ஆடத் துவங்கி
ஒவ்வொன்றாகக்
கீழே விழுந்தன

அவித்தவை
பொறித்தவை
வதங்கியவை
வெதுப்பியவை
வறுத்தவை
என குழுக்களாய்ப் பிரிந்து
பயணம் செய்தன

பாதி வழியில்
தட்பவெப்பத்தால் அழுகிப் போயின

சமைக்காத சொற்கள்
இன்னும் உயிரோடு இருக்கின்றன
இயற்கை வர்ணம் பூண்டு
குழந்தைகளின் சொற்களைப் போல

3 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் கவிதையை இதற்கு முன்பு ஓர் இணைய தளத்தில் படித்துவிட்டேன்.


//அவித்தவை
பொறித்தவை
வதங்கியவை
வெதுப்பியவை
வறுத்தவை
என குழுக்களாய்ப் பிரிந்து
பயணம் செய்தன//

//சமைக்காத சொற்கள்
இன்னும் உயிரோடு இருக்கின்றன
இயற்கை வர்ணம் பூண்டு
குழந்தைகளின் சொற்களைப் போல//

எனக்குப் பிடித்த வரிகள்,

உங்கள் கவிதைகளைக்
கொண்டு வலைப்பூவை அலங்கரிக்கலாமே!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Geetha Sambasivam said...

//சமைக்காத சொற்கள்
இன்னும் உயிரோடு இருக்கின்றன
இயற்கை வர்ணம் பூண்டு
குழந்தைகளின் சொற்களைப் போல//

மழலை, மழலை தான் என்ன இருந்தாலும் அவற்றின் இயல்புத் தனம் வருமா? அருமையான கவிதை! நன்றி.

நிலாரசிகன் said...

கவிதை நன்று.