Monday, February 25, 2008

இசையும் நடிப்பும்

இசை நிகழ்ச்சிக்குத்
துள்ளி வந்தாள்
இசை கற்றுக்கொள்ளும்
ஏழு வயது மகள்;

மூன்று மணி நேரம்
முழுதாய் முடிந்தபின்னர்
விரும்பும் பாட்டொன்றைச்
சீட்டெழுதிக் கேட்டாள்

நானும் பெரியவளானால்
நிகழ்ச்சி செய்து
குழந்தைகளின்
சீட்டுக்கெல்லாம் பாடுவேன்
என்றாள் என்னிடம்.

தொடர்ந்து பலர் கொடுக்க
அவரும் பாடினார்;

நேரம் பதினொன்றாயிற்று
தூங்கிப்போனாள்.
அவள் கேட்டபாட்டைப்
பாடகர் பாடவேயில்லை

மறுநாள் காலை,
அடடா, பாடினாரா
கேட்டாள்

சீட்டுக் கொடுத்த
சின்னப்பொண்ணுக்குப்
பாடாமல்போவாரா-
நீதான்தூங்கிட்ட கண்ணு
என்றேன்.

3 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அழகானக் கவிதை!
பாவம் -அந்த
பச்சை வாண்டு
எதிர்பார்த்த
ஏக்கத்திலேயே
தூங்கிப்போயிருக்கிறது.
மறுநாளாவது
மகிழவேண்டும் என்று -நீங்கள்
மறைத்தது நன்று.

அன்புடன்,
ஜோதிபாரதி.

சுரேகா.. said...

அய்யய்யோ...

உண்மையிலேயே
என் தங்கை மகளிடம்

ஒரு ஆர்க்கெஸ்ட்ராவுக்கு
அப்டி சொன்னேங்க..!

ஆச்சர்யம்...
அழகு..!

கலக்குங்க

லதானந்த் said...

அம்மிணி!
ரொம்ப நல்லாயிருந்துச்சு கவிதை.
நானு என்ன நெனைக்கிறேன்னா கொளந்தை சமாதானமாயிருக்கலாம். ஆனாக்க ஐஇமிணி மனசு பொக்குன்னு போயிருக்குமே