டப்பாவிலிருந்து
எங்களைத் தூக்கி எறிந்தார்கள்.
ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால்
எலும்புமுறிவு இன்றி
கைக்கோர்த்தவாறு
இறங்கி அமர்ந்தோம்
புள்ளிகளாய்
எங்களைப் பிரித்துக்கொண்டு,
எங்கள் இடைவெளிகளை
நாங்களே தீர்மானித்தோம்
கோடுகளும் வளைவுகளுமாய்
எங்கள் உடல்களைநீட்டிக்கொண்டோம்
வளைத்துக்கொண்டோம்
கைகளால் இணைத்துக்கொண்டோம்
தள்ளாதவர்களைத் தூக்கிக்கொண்டோம்
யாவரும் வியக்கும் வண்ணம்
நாங்கள் பறக்கத் துவங்கினோம்
எங்களுடன் பறந்து வந்தது
நாங்கள் வளர்த்த
அவர்கள் மகிழ்ச்சியும்
4 comments:
very good blog, congratulations
regard from Catalonia Spain
thank you
தமிழ்மணத்தில் இணைந்ததுக்கு முதலில் இந்த வாழ்த்தைப் பிடியுங்க.
நல்வரவு.
அதே அதே ... மாதங்கி நல்வரவு.
அன்புடன் வரவேற்கிறேன்,
ஜோதிபாரதி.
Post a Comment