Saturday, March 08, 2008

வேறொரு வெயில் நாளில்



உதவி மேலாளரைப்

பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு


உணவு இடைவேளையில்


விர்ரென்று ஓட்டி வந்தேன் உன்வீட்டிற்கு.



என்னை எதிர்ப்பார்த்து


வரவேற்று


சமையலறை அலமாரியிடுக்கில்


ஒளித்து வைத்திருந்த கவிதையை


வாசித்துக்காட்டினாய்


கவிதையைப் பற்றி ஏதும் தெரியாதபோதும்


எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது


உன் ஆர்வம் கண்டு.



இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பூக்கும்


இந்த ரோஜாச்செடி என்று காட்டி


இன்று பூத்ததை முகர்ந்துபார்க்கச் சொன்னாய்



நீ

எழுதிய வாசகர் கடிதம்


பிரசுரமான பத்திரிகையைக் காட்டினாய்



நல்லதொரு உணவை உண்டவாறே


கொடுக்காய்புளி


தின்றதையும்


நீர்ப்பறவைக்கூட்டத்தை


எதிர்பாராமல் பார்த்த கதையையும்


பேசிக்கொண்டோம்.



வேறொரு வெயில் நாளில் சந்திக்கலாம்


என்று மிக்க நிறைவுடன்


விடைபெற்ற போது,


நீ'


சாரி, வீடு சுத்தமாக இல்லை'


என்று வருந்தினாய்



அதை நான் எங்கே கவனித்தேன்?



'நான் பார்க்கவந்தது உன்னைத்தான்


உன் வீட்டையில்லை'


என்றபோது உன் கண்ணில் தெரிந்த


பரவசம்


பத்துநாட்களுக்குப் போதுமானதாக


உனக்கு இருக்கலாம்



இப்போது நான் யோசிக்கிறேன்


உறுத்தாத மௌனங்களின் மொழியை


நிழலின் அடியில் அசைபோட்டபடி


உன் பயங்களைக் களைவது எப்படியென்று


3 comments:

பொன் சுதா said...

வாழ்த்துக்கள். இனிய கவித்துவமான கவிதைக்கு.

சுரேகா.. said...

அசத்தியிருக்கீங்க..!

எப்படி மிஸ் பண்ணினேன்.

நல்லா...ரொம்ப நல்லா எழுதுறீங்க!

Geetha Sambasivam said...

//'நான் பார்க்கவந்தது உன்னைத்தான்



உன் வீட்டையில்லை'



என்றபோது உன் கண்ணில் தெரிந்த



பரவசம்



பத்துநாட்களுக்குப் போதுமானதாக



உனக்கு இருக்கலாம்//

ரொம்பவே சந்தோஷமா இருக்குங்க, திவாவின் பதிவுகளில் இருந்து வந்தேன், ஏதோ ஒரு காணக் கிடைக்காத பெட்டகத்தை அதன் உடமையாளர் திறந்து காட்டியது போன்ற உணர்ச்சி!