அரை மணி நேரப்
பயணம்;
பரிச்சயம் செய்துகொண்ட
பக்கத்து இருக்கை பெண்மணி
வங்கி அலுவலராம்;
குழந்தைகள்,புத்தகம்
பேச்சு நீண்டது
ஷெண்டன்வே பக்கம்
வந்தால் வங்கிக்கு
வரவேண்டும்விடைபெற்றார்.
ஆறு மாதம்
கழித்து வேறு
வேலையாக அந்தப்
பக்கம் சென்றபோது
வங்கியில் நுழைந்தேன்
உணவு இடைவேளையில்
அந்நியமான பார்வை கண்டு
வழித்துணையாய்
வந்ததை நினைவுபடுத்தியபோதும்
என்னைத் தெரியாமல் போனது
அவருக்கு
இப்ப இங்க வேலை எதுவும்
காலி இல்லை மெல்லிய
புன்னகையோடு சொன்னார்
அதன் பின்
எத்தனையோ பயணங்கள்
என்றாலும் வழித்துணையாய்
வருபவர் முகவரி கொடுத்தால்
வாங்கிக்கொள்ளத்தான் செய்கிறேன்
உயிர்மை 2006 ஆகஸ்ட்
5 comments:
wow vithiyaasanmaana karu..nalla varthaigal..sooper kavidhai..romba nalaikappuram nal kavidhai padikirane..valthukkal
app
apppdiye numma pakam vandhu parunga
மாதங்கி...!
நன்கு பழகியவர்களைப் பார்க்கச் சென்றால் எதோ உதவி கேட்டுத்தான் வந்திருக்கிறோம் என்று நினைக்கும் இன்றைய காலக் கட்டங்களில் ரயில் சினேகம் இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கமா என்பது கேள்விக் குறி. அவர் சொன்னதைக் கேட்டு அவரை சந்திக் சென்றிருக்கிறீர்கள் ... உங்கள் செயலில் எந்த தவறும் இல்லை. நட்பு நாடி செல்வது பாராட்ட வேண்டிய விசயம். நல்ல கவிதை
நல்லாருக்கு மாதங்கி! சின்னச் சின்ன அனுபவங்களை அழகான கவிதைகளாக்கும் வித்தை நன்றாக வருகிறது உங்களுக்கு. இது உங்களின் (நான்) படிக்காத ஒரு கவிதை. உங்களின் 91 வயதுக் குழந்தை பற்றிய கவிதை, காலை இழந்த (தொலைத்த) கவிதைகளை நான் தமிழ் முரசில் படித்திருக்கிறேன். நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். என் வலைப்பூவுக்கு உங்கள் வருகைக்கு நன்றி.
மாதங்கி அம்மிணி!
ரயில் சினேகிதம் கவிதை நல்லா இருக்கு. எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கு. ஒரே ஒரு வித்தியாசம். பேங்க் அம்மிணி மாதிரி நான் நடந்துகிட்டிருக்கேன். வெக்கமா இருக்கு
இணையத்தில் எ்ழுத ஆரம்பித்த 15 நாட்களில் என்னைக் கவர்ந்தவை என்ற கட்டுரை எனது வலை தளமான
www.lathananthpakkam.blogspot.com ல்
உள்ளது. அதில் தங்களது கவிதை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். பார்க்கவும்.
Post a Comment