Wednesday, September 13, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?-55 fiction

தமிழ்ச்செல்வன் மனதை நிதானப்படுத்திக்கொண்டான். இப்படி ஆள்அரவம் இல்லாத இடத்தில் வாகனம் ரிப்பேர் ஆகி மாட்டிக்கொண்டாகிவிட்டது. தகவல்தொடர்பு சாதனம் வேலை செய்யவில்லை.

இவ்வளவு பொறுத்தது பெரிசுதான், உணவுதான் இல்லை என்றாகிவிட்டது, மூச்சாவது விட முடிகிறதே, , இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாம், வண்டிக்குள்ளேயே இருந்தால் யாராவது பார்க்கமாட்டார்களா?

ஏதோ சத்தம் கேட்டது.

இருவர் அவன் வாகனத்தைப் பார்த்துவிட்டு தங்களுடைய சைக்கிளை நிறுத்திவிட்டு அவனை நோக்கி வந்தார்கள்.

"கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" கேட்டான்.

அந்த வேற்று கிரகவாசிகள் பதில் சொல்லவில்லை; புன்னகைத்தார்கள்.




6 comments:

Boston Bala said...

elegant

MSV Muthu said...

ம்ம்.. சிம்பிள் அன்ட் சூப்பர்..வாழ்த்துக்கள்.

ஓகை said...

நன்றாக இருக்கிறது.

ராம்குமார் அமுதன் said...

ஆனந்த விகடனில் வரும் ஒரு நிமிடக் கதைகள் போல அழகான குட்டிக்கதை. இரண்டாம் முறை வாசிக்க வைப்பதே உங்கள் கதையின் வெற்றி. வாழ்த்துக்கள்....

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

small, simple and cute
good one mathangi !

மு.கார்த்திகேயன் said...

என் பதிவில் உங்கள் முதல் வருகைக்கு நன்றி மாதங்கி..

எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள் போல.. மறுபடியும் எழுதுங்களேன்