Thursday, August 31, 2006

ஔவை- யார்

சரித்திரத்தின் முதல் ஔவை
சங்ககால ஔவை மூவேந்தரும்
பெரியராய்க் கருதிப் போற்றிட
புறம்அகம் நற்றிணை குறுந்தொகை
அரிய பாடல்களால் சங்கத்தில்
அங்கம் வகித்த பாடினி
தெரிமுகமும் தேவையோ கிமுவில்
தோன்றிய தென்ற லுக்கு


தாமம் தரித்த ஆயுதங்களை
தாமத்துடன் நிறுத்தி வைத்து
யாமே என்று இருமாப்புடன்
எண்ணி இருந்தான் தொண்டைமான்


தொண்டைமானின் செருக்கை அங்கதத்தால்
துண்டாக்கியவர் மழவரின் தூதரானார்
அண்டத்தில் இணக்கம் உண்டானால்
அகிலத்தில் அமைதிஉரு வாகுமென்ற
திண்ணமுடன் பேச்சு தெவிட்டாத
தமிழ்ப்பாட்டு அவர்தம் மூச்சு
வண்ணம் கொண்ட அரியகனி
வெகுமதிக்கு அதியனின் வெகுமதி


வம்பிற்கு வாய்ப்பூட்டினாய்- உன்னை
நம்பியோருக்கும் நல்ல வாய்ப்பு ஊட்டினாய்
நலமறிய நீ நினைத்ததில்லை
மக்களின்நலம் அறியவே நடையாய் நடந்தாய்நன்னிலை நல்கிய பன்னிரெண்டாம்
நூற்றாண்டின் நலமிகு ஔவையே
மன்னுலகில் யோகத்தில் நிபுணை
மறைதிரு சமயகால ஔவை
பின்னையவள் துதிபாடி அற்புதமாய்
பொன்முடிப்பு இற்றதன் மாயமென்ன
மன்னவன்வியக் கநான்குகோடிபண் பாடிஇரவு
முழுதும் பண்பழகிய பண்பழகி


ஒருகாலில் நாலிலைப்பந் தலடிஎன
உன்னைச் சோதிக்க புதிர்போட
திருமுகம் மலர ஆண்கவியிடம்
சருக்காமல் ஆரையடா சொன்னாய்
சுருக்கமாய் விடுகவிக்கு விடைகூறி
சங்கைத் தீர்த்த அன்பருளே
அருந்தமிழில் அசதிக் கோவையும்
அழகுபந்தன் அந்தாதியும் தந்திட்டாய்


வரும் இன்னலைத்
தீர்க்கவந்தமின்னலே

அன்பருளே


அன்பர் உளே உறையும்

இறைவன் ஒருவனுக்கே
தலைவணங்கி நீ பாடிய
அகவலால்சேரமானுக்கு முன்பே
வேழமுகத்தோனின் ஒருகையால்
கைலாயத்தைமுதலில்
அடைந்ததத்துவஞானியேதமிழ்பால் கொண்டமுனைப்பால் தன்பால் அன்பால் கட்டுண்டமானிடர்பால் கொண்டதவிப்பால் உருவானமுப்பால் தன்பால் வீட்டுநெறிப்பால் திருவருட்பால் என ஞானப்பால் அருளியஔவைக்குறளைப் படித்தால் புருவங்கள்உயரும் திகைப்பால் யோகத்தின்பால் பெண்களின்அறிவைக் கண்ட களிப்பால் வந்த வியப்பால்

ஒருவனையே வணங்கி
இருவகை அறத்தையே உரைத்து
முக்குற்றம் நீங்க வழி நடத்தி
நானிலம் போற்றஐந்திலக்கணம் அமைய கவிபாடி
அறுவர் உடன் பிறந்த ஐயயே
எழுபிறப்பையும் பாடியுள்ளாய்
எண்வகை யோகங்களை ஏற்றிவைத்தாய்
நவரசம் பொங்க நற்றமிழில் பாடி
பத்துகுற்றம் நீக்கி
பத்தழகு மிளிர பாட்டெழுதி
நூற்றுக்கு ஒருவரேஅவையில் இருக்கத்தக்கவர்
ஆயிரத்தில் ஒருவரேபுலமையுடையவர்
பத்தாயிரத்தில் ஒருவரே வாக்குவன்மையும்பெற்றிருப்பவர் கொடைவள்ளலோகோடியில் ஒருவரே என்று

கம்பரையும்
புகழேந்தியையும்
ஒட்டக்கூத்தரையும்
செயங்கொண்டாரையும்
மன்னரையும்
வைத்துக்கொண்டே
உன்னைத் தவிர வேறு யாரால் கூற இயலும்?பதியனாய்ப்பிள்ளைகள் மனதில்பதிந்தவர்பதினாறாம் நூற்றாண்டின்புதிய ஔவை


நாவாய்போல் நயமிகு பாக்களைக் நன்றாய்க் கரைசேர்த்தே மக்களிடம்நாவாயை ஆளவும் வேண்டினாய்தையல் சொல் கேளேல்
தையல் சொல் கேட்காதே என்று தாங்கள்கூறவில்லை
கேள் ஏல் என்றீர்கள்ஏல் என்றால் ஏற்றுக்கொள்வதுஎன்ற நீங்கள் சொல்லியதைநாங்கள் புரிந்துகொள்கிறோம்

வித்தை நன்றாய்விதைத்திட்டால்
வித்தை பலவும்கற்றிடலாம் என்றேஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி என்று நல்வழிகாட்டியநாயகியே


ஆழ அமுக்கி முகக்கினும்
ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி
என்று நீங்கள் கூறியதை
நாங்கள் உலகுக்குஅறிவிக்காததால்
இன்று இதே இயற்பியல்தத்துவத்தை
பின்னாளில்
வேறொருவர் கண்டுபிடித்ததாகப்
படித்துக்கொண்டு வருகிறோம்


ஔவையேஎங்களைமன்னித்துவிடுக
நீ குறித்ததசம எண்களையும்நாங்கள் விட்டுவிட்டோம்வேறொருவருக்குவிட்டுவிட்டோம்

இருக்கையைத் தேடாமல்இருகைவீசிநடைபயின்றாய்
உடலையும்
உள்ளத்தையும்
ஊரையும் காக்க
உன் கருத்துக்களைக்
காதுகொடுத்துகேட்டாலே போதும்


கேளுங்கள் எப்போதும்.

ஔவைஎன்றபெயரில்ஒவ்வொரு காலகட்டத்திலும்எத்துணைஔவையர்
அத்தனைஔவையருக்கும்

மொத்தமாய்வணக்கங்கள்

1 comment:

கோவி.கண்ணன் [GK] said...

மாதங்கி அவர்களே ...!

கவிதை நன்றாக இருக்கிறது !

//ஔவைஎன்றபெயரில்ஒவ்வொரு காலகட்டத்திலும்எத்துணைஔவையர்
அத்தனைஔவையருக்கும்

மொத்தமாய்வணக்கங்கள்//

அப்படியே, நானும் வணக்கம் செலுத்துகிறேன் !