Thursday, December 07, 2006

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி

உற்சாகம் கொப்பளிக்கும் முகம்

உழைப்பு என்றால் எனக்கு வெல்லம்
பெண்ணுக்குத் தலை பின்னிவிடுவேன்
சமையல் செய்வேன்

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுப்பேன்
ரங்கோலி போட்டியில் இந்த ஆண்டும்முதல் பரிசு


பாட்டுகூட கற்றுக்கொள்கிறேன்
ஞாயிற்றுக்கிழமைகளில்

ஒரு முறை
தவறவிட்டக் கேமராவை

சுற்றுலாப்பயணி
ஓடி வந்து
கொடுத்திருக்கிறார்

மறந்துவிட்ட பர்ஸை
ஆட்டோ ஓட்டுனர்
வீடுதேடி வந்து
கொடுத்துவிட்டார்


ஒரு பொருளைக் கூட
இதுவரைத்தொலைத்ததில்லை

பத்தாண்டுகளுக்கு முன்
விபத்தில் இழந்த
என் இடது கையைத் தவிர


2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னப்பா இது சந்தோசமா படிச்சிகிட்டே வந்தேன்.
திடுக்கின்னு ஆச்சுப்பா முடிவு.
ம் ..இருந்தாலும்
அதிர்ஷ்டம் தான் இன்னொரு கை
இருக்கே.நல்ல கவிதை.

butterfly Surya said...

நல்ல கவிதை

வாழ்த்துக்கள்..

சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com