Thursday, June 11, 2009

சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி

சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி
வளரும் மணிப்ளாண்ட்டுக்குப்
பக்கத்தில்
சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையைப்
பிடிவாதமாக
ஒரு மண்தொட்டியில்
நட்டுவிட்டது குழந்தை.


என்ன செய்வது
என்று தெரியவில்லை
ஒன்றரை அடி உயரத்திற்கு
வளர்ந்துவிட்ட மாங்கன்றை

7 comments:

மயாதி said...

நியாயமான சந்தேகம் ?
நீங்கள் மரத்தை என்ன செய்வது என்று யோசிக்கிறீர்கள், சில இடங்களில் மனிதர்களை யோசிக்காமல் அள்ளி எறிகிறார்கள்..

இன்னும் நிறைய எழுதுங்கள் தோழி!

நட்புடன் ஜமால் said...

ரொம்ப யோசிக்க வச்சிப்புட்டியளே!

குழந்தையின் பிடிவாதம், 1 1/2 அடி உயரத்திற்கு வளந்து நிக்கிறதோ ...


ஒன்னும் விளங்கையில்லை ...

ஆயில்யன் said...

//பிடிவாதமாக
ஒரு மண்தொட்டியில்
நட்டுவிட்டது குழந்தை//

குழந்தையின் இந்த பிடிவாதங்கள் வரவேற்கப்படவேண்டியவை :))

"உழவன்" "Uzhavan" said...

//என்ன செய்வது
என்று தெரியவில்லை//

நான் வாங்கிக்கொள்கிறேன் :-)

அன்புடன் அருணா said...

வளரும் வரை வளர விடுங்கள் மாதங்கி!

priyamudanprabu said...

////
என்ன செய்வது
என்று தெரியவில்லை
ஒன்றரை அடி உயரத்திற்கு
வளர்ந்துவிட்ட மாங்கன்றை
///

சரியான கேள்விதான்


///
நீங்கள் மரத்தை என்ன செய்வது என்று யோசிக்கிறீர்கள், சில இடங்களில் மனிதர்களை யோசிக்காமல் அள்ளி எறிகிறார்கள்..
///

இது நல்லாயிருக்கு

Several tips said...

யோசிக்க வேண்டியதே