Wednesday, January 14, 2009

மலைகளின் பறத்தல்

முன்னொரு நாளில்

தோன்றியபோதெல்லாம்

இறக்கைகளை விரித்துக்கொண்டு

பறந்து கொண்டிருந்த மலைகளைக்

கெஞ்சிக் கேட்டேன்

பறப்பதை நிறுத்திவிடுங்களேன்



நிமித்த காரணம் சொல்லலாமே

அவை கேட்டன



எங்கள் குழந்தைகள்

தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்

எங்களுக்கே சோறு

பலசமயங்களில்

இறங்குவதில்லை

சில பறவைகள்

உங்களைக் கண்டு

பறத்தலையே மறக்கத் துவங்கிவிட்டன

எங்கள் குழந்தைகள்

வெட்டவெளிகளில்

விளையாட மறுக்கின்றனர்

பயிர்த்தொழில் பாதிப்படைகிறது

எங்கள் நிம்மதி

உங்களால் போய்க்கொண்டிருக்கிறது



தங்களால் யாரும்

உயிரிழக்காத போதும்

எங்களுக்காக

தாமே தம் இறக்கைகளை

இற்றுப்போகசெய்து

பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்



இன்று

யுத்த பேரிகைகளும்

போர்ச்சாவுகளும்

உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்

மலைகள் சிரிக்குமோ அழுமோ



வடக்குவாசல் டிசம்பர் 2008

9 comments:

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

M.Rishan Shareef said...

கவிதை அருமை !

மாதங்கி said...

Jothibharathi said


தங்களின் உணர்வும் ஆதங்கமும் நெகிழ வைக்கின்றன.
கவிதை நன்று!
தங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மறு பிரசுரம் செய்தீர்களா?

narsim said...

கவிதை அருமை !

anujanya said...

சிறப்பாக உள்ளது கவிதை.

அனுஜன்யா

தமிழ் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

priyamudanprabu said...

///
இன்று

யுத்த பேரிகைகளும்

போர்ச்சாவுகளும்

உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்

மலைகள் சிரிக்குமோ அழுமோ
////

நல்லயிருக்கு

சென்ஷி said...

கவிதை நல்லாருக்குங்க