Monday, March 17, 2008

பத்து மணியும் ஆறுமணியும்

இறுக்கப்பிடித்த விரலை
மெல்ல அவிழ்க்கிறாள் அம்மா
உடலோடு ஒட்டியிருந்த
காதுகளை இழந்த பொம்மையை
எடுத்து
மேசையில் வைக்கிறாள்
போர்வையைச் சரி செய்துவிட்டுப்படுக்கப்போகிறாள்.

கண்விழித்ததும்
முதல் வேலையாக
பொம்மையை
எடுத்து
குழந்தையிடம் வைக்கிறாள்
உடலோடு ஒட்டி

2 comments:

ஆயில்யன் said...

//கண்விழித்ததும்
முதல் வேலையாக
பொம்மையை
எடுத்து
குழந்தையிடம் வைக்கிறாள்
உடலோடு ஒட்டி
//
பெண்மை,
பொம்மையை வைத்து அன்பு வளர்க்கும் அதிசய உலகமாகிப்போனது சோகமான விஷயம்தான்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உணர்வுபூர்வமான ஒரு விடயத்தை, எளிதாக, அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.