கொய்யா மாங்காய் பலாக்காய்
பழுத்துவிட்டால் பழம் அக்கா
கனிகள் ரொம்ப சுவையக்கா
கனிமங்களும் இருக்கு அக்காதாகத்திற்கு தர்பூசணி
தண்ணீர் நெறஞ்சு இருக்கு -நீ
வாழைப்பழம் தினம் ஒன்று
வாங்கிவந்து சாப்பிடக்கா
துவர்ப்புமிகு முழுநெல்லிக்கா
துண்டாக்கி சாப்பிடுக்கா
தேடிப்போய் பலாப்பழம்
தேனோடு சாப்பிடுக்கா
கனிகளிலே அரசந்தான்
கனமான மாங்கனிதான்
கருத்தைக் கவரும் பப்பாளி
கண்ணுக்கு தருமே நல்லொளி
முத்துமுத்தாய் மாதுளமே
ரத்தசுத்தி செய்திடுமே
கொத்து கொத்தாய் திராட்சைதான்
கொடுத்திடுமே இரும்புச்சத்தைத்தான்
நல்ல புதிய கனிகளையே
நல்ல நீரில் கழுவியே
நன்றாய் மென்று தின்போமே
நல்ல உடலுறுதி பெறுவோமே
2 comments:
பாடலுக்கு நன்றி
பழங்களின் நன்மைகளையும், அவற்றை எப்படியெல்லாம் சாப்பிடனும் என்றும், எத்தனை சாப்பிடனும் என்றும் அறிவுறையாக சொல்லி இருக்கிறீர்கள். குழந்தைப் பாசம் வெளிப்படுகிறது. நல்ல பாப்பா பாட்டு.
Post a Comment