Tuesday, January 10, 2006

கருவே இல்லாத கதை

55 fiction- 3

கருவே இல்லாமல் ஒரு கதை

"கருவே இல்லாமல் ஒரு கதை சொல்ல முடியுமா?," ராஜன் கேட்டான். "முடியாது" -இது கிருஷ்ணன் அவன் நண்பன்.
"எங்கே ஒரு குட்டிச்சிறுகதை, மூன்று வார்த்தைகளில், கருவே இல்லாமல் சொல்லு பார்க்கலாம்''
"மூன்று வார்த்தை கதை என்றாலும் கரு நிச்சயம் இருக்கும்," கிருஷ்ணன் சவால் விட்டான். இதைக் கேட்டுப் பார்,"'கருவே இல்லாத கதை' இது கூட ஒரு கதை தான் .
"கதைக்கரு எங்கேயிருக்கு கிருஷ்ணா?"
"அதுதான், அதேதான் 'கருவே இல்லாத கதை' அதுதான் கதையின் கரு என்றான் கிருஷ்ணன்.

3 comments:

Unknown said...

என்ன விளையாட்டு இது? சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு...

G.Ragavan said...

நான் பயந்து பயந்துதான் வந்தேன். கருவே இல்லாக் கதையின் கரு என்னன்னு தேடி. இப்பிடி ஆயிடுச்சே......சரி. அவ்வளவுதான் கொடுத்து வெச்சது. (ஆனா நல்லாருந்துச்சோ!)

லதா said...

// அதேதான் 'கருவே இல்லாத கதை' அதுதான் கதையின் கரு //

கருதான் முதல் வார்த்தையிலேயே இருக்கிறதே. 'கருவே இல்லாத கதை'ன்னு எப்படி கதை விடுறீங்க ? :-)))