முதல் மதிப்பெண்
பள்ளிப்பையை வைத்தவுடன் அம்மா "மார்க் கொடுத்தாச்சா" என்று கேட்டாள். எல்லா பாடத்திலும் நூறு. பாட்டுப்போட்டி, ஓட்டப்பந்தயத்தில் மெடல். அப்பாவும் நீங்களும் ரூமில் பூட்டி தினம் அடிக்க மாட்டீர்களே, நான் விளையாட போகலாமா என்றான். சரி என்று அம்மா சொன்னதும் ஓடினான். கதவைத் தாளிட்டு, ஒளித்து வைத்திருந்த கருவியில், பிரபு, நீ அங்கேயே இரு, இங்கு என் போல் ஒரு ரோபோ போதும்" என்று மாணவ ரகசிய பரிமாற்று திட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்த நண்பனுக்கு தகவல் அனுப்பினான்.
3 comments:
சகோதரி,
இந்த கதையை படித்ததும், சிரிப்பதா அழுவதா என்று நினைக்கிறேன்.
சிரிப்பது என்றால் மாணவனின் புத்திச்சாலித்தனத்தை மெச்சுவது.
அழுவது என்பது, இன்றைய நிலையில் குழந்தைகள் பெற்றோர் நடத்துவது, சின்னஞ்சிறு குருவியில் தலையில் பெரிய பாறையை சுமக்க வைப்பது போல் எத்தனை எத்தனை கட்டளைகள்.
குழந்தைகள் பருவம் என்பது வான வெளியில் சுதந்திரமாக பாடித்திரியும் குயில்கள் போன்றது, அவற்றை கூண்டில் அடைக்கக்கூடாது, அது மாதிரி சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் மதிப்பெண் எடு, அடுத்த வீட்டு சிறுவனைப் போல் டென்னிஸில் பெரிய ஆளாகு, என் அக்கா பையன் மாதிரி படிப்பில் முதலிடம் பெறு, இப்படி பல விதமான கட்டளைகள்.
என்னுடைய குழந்தை பருவத்தில் ஒரு நாள் கூட என் தாயார் நீ படி, அதை செய், இதை செய் என்று கட்டளை இட்டதே கிடையாது, சுதந்திரப்பறவையாக இருந்தேன், அதே நேரத்தில் என் பொறுப்பை உணர்ந்து படித்தேன். படிப்பிலும், சரி, விளையாட்டு, மற்ற போட்டிகளிலும் சரி, என் விருப்பம் போல் என் தாயார் அனுமதித்தார். அதே நிலையை என் மகளுக்கும் கொடுக்க இருக்கிறேன்.
இதை மற்ற பெற்றோரும் உணர வேண்டும்.
வாழ்த்துக்கள் மாதங்கி.
ஒரு பெரிய விடயத்தை சில வார்த்தைகளை மட்டும் கோர்த்து தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.
பல பெற்றேர்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் இது.
Post a Comment