Monday, October 31, 2005

பல நாள் சந்தேகம் பஹேலியால் தீர்ந்தது--

பல நாள் புதிராக இருந்ததை பஹேலியில் உடைத்துவிட்டார்கள்.


கதைகளில் பூதம் அல்லது பேய் செயற்கரிய செயல்களையெல்லாம் செய்யும் ஆனால் ஒரு குடுவையில் புகுந்தபிறகு மூடிவிட்டால் வெளிவர முடியாது. முரண்பாடாக இருக்கிறதே என்று நினைப்பேன். பஹேலியில் இதை உடைத்துவிட்டார்கள்.


ஹிந்தி திரைப்படம் பஹேலியில்- பணத்தில் குறியாய் இருக்கும் வியாபாரத் தந்தை திருமணமான (இளைய மகன்) மறுநாளே மகனை வியாபார நிமித்தம் 5 ஆண்டுகள் வெளியூருக்கு அனுப்பிவிடுகிறார்.


கிடைத்த சிலமணிநேரங்களில் மனைவியை தூங்கச்சொல்லிவிட்டு கணக்குகளை கண்விழித்து பார்க்கிறான் மகன். புது மனைவிக்கு ஆறுதல்- கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்கும் அண்ணி (மூத்த மகனின் மனைவி) புது மனைவியின் காதல் கொள்ளும் ஒரு பேய் கணவன் உருவத்தில் வருகிறது. ஆனால் மிகவும் கண்ணியமான பேய் மனைவியிடன் உண்மையைச் சொல்லி பின்னர் அவள் சம்மதத்துடன் வாழ்கிறான். (வாழ்கிறது?)



எனக்குத் தோன்றிய எண்ணங்கள்

1. கணவன் எப்படி கல்யாணத்திற்குப் பின்னும் மனைவியிடம் காதலனாக இருக்க முடியும் என்று பேய் சொல்லித் தருகிறது.

2. நகைச்சுவைக் காட்சிகள் படு யதார்த்தம்.

3. எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது அண்ணி ஜூஹி சாவ்லா கண்களில் தெரியும் ஏக்கம்--நல்லதொரு தோழனைத் தொலைத்த சோகம்-


இந்தப் படத்தில் வசனத்திலோ, காட்சிகளிலிலோ மிக எளிதாக ஆபாசத்தை புகுத்தியிருக்கலாம். அந்தத் தப்பை அமொல் பொலேக்கர் செய்யவில்லை- கச்சி தூப் எடுத்தவராயிற்றே.


ஆஸ்காருக்கு போகப்போகிறதாம். வசனம் இல்லாமலே புரிந்துகொள்ளலாம் கவிதை போல் எடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் கூட்டுக்குடும்பம், பந்தயத்தில் தோற்ற அவமானத்தில் வீட்டைவிட்டு போகும் கணவன் இதெல்லாம் கச்சிதமாக சப்டைட்டிலில் புரிந்து கொள்ளலாம்.


கடைசியில் அமிதாப் டென்ஷன் இல்லாமல் தீர்ப்பு கூறி பேயை பையில் அடைத்துவிட்டார். அதுதான் எந்த உருவமும் எடுக்கும், தங்கக்காசு, மழை எல்லாம் வரவழைக்கும், ஆனால் எப்படி பையில் அல்லது குடுவையில் அடைத்தால் மட்டும் வெளிவராது என்ற முரணை உடைத்துவிட்டார்கள்.
முடிவு: அதான், அதேதான்

1 comment:

Boston Bala said...

நானும் இப்போதுதான் (ரசித்து) பார்த்தேன். எளிமையான விமர்சனம்.