அருகில் இருப்பவர்
தோளைத் தட்டுகிறார்கள்
கேவிக்கேவி அழுகிறார்கள்
கேவிக்கேவி அழுகிறார்கள்
பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து
கௌளி சொல்கிறார்கள்
வாயைக்குவித்து வியக்கிறார்கள்
வாயைக்குவித்து வியக்கிறார்கள்
இப்படிப் பார்த்ததே இல்லையெனப்
பகிர்ந்துகொள்கிறார்கள்
பூரித்துப் போகிறார்கள்
பூரித்துப் போகிறார்கள்
கைகளைக் கொட்டுகிறார்கள்
இப்படித்தான் இருக்கவேண்டும்
அல்லது இருக்கப்போகிறேன்
என்கிறார்கள்
பதறி நடுக்குறுகிறார்கள்
பதறி நடுக்குறுகிறார்கள்
ஒருவரை ஒருவர் ஆதரவாய்ப்பிடித்துக்கொள்கிறார்கள்
சீச்சீ என்கிறார்கள்
சீச்சீ என்கிறார்கள்
லஜ்ஜையுடன் பக்கத்தில் இருப்பவரைப் பார்க்கிறார்கள்
அல்லது கையை விரிக்கிறார்கள்
பல்லைக் கடிக்கிறார்கள்
பல்லைக் கடிக்கிறார்கள்
நானாய் இருந்தால்
இப்படிச் செய்திருக்கமாட்டேன்
என்கிறார்கள்
விசையை அணைத்தபின்
விசையை அணைத்தபின்
தானியங்கிபோல்
நடக்கிறார்கள்
நடக்கிறார்கள்
தொங்கிய முகத்துடன்
மௌனித்தவாறே
வெவ்வேறு பாதைகளில்
அநங்கம், மலேசியா
மே2009 இதழ்
3 comments:
ரொம்ப நல்லா இருக்குது. திரையரங்கில்கூட ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வெளி வரும்போது, அப் படம் சார்ந்த உணர்வுகளில், கனவுகளில் இருப்போம். ஆனால், வெளியுலகம் வந்ததும் நம் நிதர்சனம் சுடும்.
திரைப்படமா
சீரியலா
கனவுகளில் மிதக்கவே அநேகருக்கு(என்னை போன்றோருக்கும்) விருப்பம் போல ...
கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
Post a Comment