Friday, April 25, 2008

சின்னஞ்சிறுகதை ஒன்று

அழகுப்பொருள்


"நம்ம குழந்தை கழுத்துக்கு இந்த அழகுசாமான் ரொம்ப பொருத்தமாக இருக்கும், என்ன வாங்கிடுவோமா "அவன் அவளைக் கேட்டான்.


"சுமாராத்தான் இருக்கு; வேணா குழந்தை ஆசைப்பட்டால் வாங்கிக்கொடுத்து விளையாடச்சொல்லலாம். இப்பெல்லாம் எல்லா பசங்களும் இதைத்தான் கழுத்தில் கோத்துகிட்டு விளையாடறாங்களாம்".


வாங்கினார்கள்.

அம்மா அதை அவன் கழுத்தில் மாட்டினாள்.


"அம்மா அம்மா ரொம்ப ஜோரா இருக்கு என் ப்ரெண்ட் கூட இதே மாதிரி போட்டிருக்கான், இது எதுலமா பண்ணினது?"


"மனுசனோட பல்லு கண்ணு", அம்மா தும்பிக்கையால் மகனைத் தடவிக்கொடுத்தாள்.

11 comments:

திவாண்ணா said...

:-))))))))))))))))

Geetha Sambasivam said...

திவா சுட்டிக் காட்டி இங்கே வந்தேன் , மாதங்கி, நல்ல நகைச்சுவைக் கட்டுரை, நிஜத்திலும் இப்படி நடந்தால் என்ற நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

ரசிகன் said...

ஹா..ஹா.. :))))

தந்தத்திற்க்காக யானைகளை கொல்லும் கும்பலுக்கு இந்த கதை தெரியுமா? தெரிந்தாலும் புரியுமா?

நல்லா இருக்குங்க..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கதை அருமை!

இந்த வார வியாழன் விசிட் வரவில்லையா?

அன்புடன்,
ஜோதிபாரதி.

U.P.Tharsan said...

:-)) நல்ல கற்பனை

லதானந்த் said...

மாதங்கி அம்மிணிக்கு,
வணக்கம். கதை ஜோரா இருந்துச்சு!

மாமனையும் கொளந்தைங்களையும் கூட்டீட்டு இந்தியாவுக்கு –தமிள்நாட்டுக்கு- ஒரு தபா வாங்களேன்! காட்டையெல்லாம் சுத்திக் காமிக்கிறேன்.

லதானந்த் said...

மாதங்கி அம்மிணிக்கு,
வணக்கம். கதை ஜோரா இருந்துச்சு!

மாமனையும் கொளந்தைங்களையும் கூட்டீட்டு இந்தியாவுக்கு –தமிள்நாட்டுக்கு- ஒரு தபா வாங்களேன்! காட்டையெல்லாம் சுத்திக் காமிக்கிறேன்.

ரம்மி said...

கதை நல்லா இருக்கு. :)

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்குங்க.
இன்றைய தமிழ்முரசில் வந்த கவிதையும் அருமை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

interesting !

நானானி said...

மாதங்கி!!
கதை நல்லாருக்கு! அதுவே நிஜமானால்...? அப்பவும் மனுசப்பயலுக்கு புத்திவராது.
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறித்தான் ஆகணும்!