Tuesday, March 13, 2007

விடையென்ன எண்ணி விளி

விடுகதை வெண்பா


மூன்றெழுத்துச் சொல்லின் முதலிரண்டு கற்கியாம்

ஆன்றநடு நீங்கிடின் ஆதானே -- சான்றோர்

கடையிரண்டு நீங்கின் கடுங்காற்று என்பர்

விடையென்ன எண்ணி விளி

3 comments:

மாதங்கி said...

வல்லிசிம்ஹன்,

நீங்கள் எழுதிய வார்த்தைகளில் ஒன்று விடையில் வருகிறது. இன்னும் சிறிது முயலுங்கள். இரண்டு எழுத்துக்களைச் சரியாகச்
சொல்லிவிட்டீர்கள்; இன்னும் ஒரு எழுத்துதான்,

வல்லிசிம்ஹன் said...

அம்மாடியோவ்.
கடும் விடுகதையா இருக்கெ.
கல்,
பசு,
புயல்
இப்படித் தனி தனி வார்த்தைகள் தெரிகிறது. என் புத்திக்கு எட்டினது.
மொத்த வார்த்தை என்னவோ மாதங்கி.?

Floraipuyal said...

யாவும் அறிமொழியாம் இன்தமிழ் கொண்டொருவெண்
பாவில் விடுகதையும் பாடினை - ஆவும்
குதிரயும் கேளேன் கவிபாடி நின்றேன்
பதிலெனத் தாராய் பரிசு