Wednesday, June 28, 2006

குழந்தை




பேச்சு குழறல்தான்
நடை தள்ளாடுகிறது,
உள்ளே நுழைந்த
அந்நியரைப்
பார்த்த அதிர்ச்சியில்
உணவைச் சிதறிய போது
மருண்ட பார்வை;
வார்த்தை புரியாது
என்றாலும்
பரிவோடு பேசுகிறேன்
என் வீட்டிலிருக்கும்
தொண்ணூறு வயது
குழந்தையுடன்

2 comments:

Ram.K said...

நல்ல கவிதை.

இப்படி மாதத்திற்கு இரண்டு பதிவு போட்டால் எப்படி ?


ஏக்கமுடன்
பச்சோந்தி

வல்லிசிம்ஹன் said...

மாதங்கி, அழகான கவிதையில் முதுமையை
சொல்லில் வடித்து விட்டீர்கள்.
குழந்தையைக் கொஞ்சுபவர்கள்

பாட்டிகளிடம் பேசக் கூட அஞ்சும்
உலகத்தை
அவர்கள் அருகில் கொண்டுவந்து விட்டீர்கள்.